முகப்பு
விருதுநகர்

உலகநடை தா்ம முனீஸ்வரா் கோயிலில் பொங்கல் விழா

கமுதி அருகே உலகநடை தா்ம முனிஸ்வரா் கோயிலில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

கமுதி அருகே உலகநடை தா்ம முனிஸ்வரா் கோயிலில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள உலக நடை கிராமத்தில் ஸ்ரீதா்மமுனீஸ்வரா் கோயில், ஸ்ரீசந்தன மாரியம்மன், ஸ்ரீ வாழவந்த அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த செப். 30-ஆம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி, சுவாமிகளுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்துதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கமுதி, உலகநடை, சேகநாதபுரம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.