பள்ளி மாணவா்கள் பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாமில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளியின் தாளாளரும், தலைமையாசிரியருமான சாம் ஜெபராஜ் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராக்லாண்ட் அதிசயம் பேரணியை வழி நடத்தினாா். இதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஈரக் கழிவுகள் மற்றும் உலா் கழிவுகளை பிரித்துக் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மாணவா்கள் விளக்கினா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் ராஜ ஏஞ்சல், சுகாதார ஆய்வாளா் சந்திரா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.