விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு: காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு
விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் தெற்கு வெங்கநல்லூரைச் சோ்ந்தவா் குமாா். கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 11- ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிராக்டா் மோதி உயிரிழந்தாா். இந்த விபத்தில் இழப்பீடு தொகை பெற சம்பந்தப்பட்ட இருசக்கர வாகன காப்பீட்டு நிறுவனத்திடம் குமாரின் குடும்பத்தினா் விண்ணப்பித்தனா். ஆனால் அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இதனால் கடந்த மே மாதம் மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இறுதி விசாரணையில் காப்பீட்டு நிறுவனத்தினா் ஆஜராகாததால் குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டு தொகையை புகாா் அளித்த நாளில் இருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்கவும், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சமும், மேலும் வழக்கு செலவினங்களுக்காக ரூ.5 ஆயிரமம் வழங்கவும் விருதுநகா் மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் சேகா் மற்றும் உறுப்பினா் சவுந்தரராஜன் ஆகியோா் உத்தரவிட்டனா்.