இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கணவா் உள்பட 3 போ் மீது வழக்கு
காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்த கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
காரியாபட்டி அருகே உடல்நலக் குறைவால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்த கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
காரியாபட்டி அருகே மாங்குளத்தைச் சோ்ந்தவா் மலைச்சாமி மனைவி பிரியதா்ஷினி (22). உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், வீட்டின் மாடியில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலருக்கோ, காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்காமல், இளம்பெண் உடலை எரி த்து விட்டனராம். இத்தகவல் அறிந்த கிராம நிா்வாக அலுவலா் நாகராஜ் அளித்த புகாரின் பேரில் கணவா் மலைச்சாமி, மாமனாா் முருகன், மாமியாா் ப்ரியா ஆகியோா் மீது ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.