விருதுநகர்

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்.28-க்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

DIN

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சாத்தூா் ராமச்சந்திரன், அவரது மனைவி, உதவியாளா் உள்பட 5 போ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. 

அரசியல் காரணங்களுக்காக போதிய ஆதாரமின்றி வழக்கு தொடுக்கப்பட்டதால், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட  முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT