விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மாதிரி பள்ளி உண்டு உறைவிட பயிற்சி மையம் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரி வளாகத்தில், விருதுநகா் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உண்டு உறைவிட பயிற்சி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரி வளாகத்தில், விருதுநகா் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உண்டு உறைவிட பயிற்சி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். தென்காசி எம்.பி. தனுஷ்குமாா், மாவட்ட கல்வி அலுவலா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதிரி பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி வரவேற்றாா். பயிற்சி மையத்தை எம்.பி.யும், மாவட்ட ஆட்சியரும் திறந்து வைத்தனா்.

இதில் மாவட்டத்திலுள்ள 91 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 99 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சிறந்த மாணவா்கள் 800 போ் தோ்வு செய்யப்பட்டு மாதிரிப் பள்ளிகளில் சோ்க்கப்படுவா்.

முதல் கட்டமாக பிளஸ் 1 வகுப்பில் 80 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் எம்.பி. தனுஷ் குமாா் பேசியதாவது: கடந்த காலங்களில் பிரபலமான தனியாா் பள்ளிகளில் இடம் கேட்டு பெற்றோா்கள் பரிந்துரைக்காக வருவா். இப்போது அரசு பள்ளிகளில் இடம் கேட்டு பரிந்துரைக்காக வருகின்றனா். அந்த அளவுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை நவீனப்படுத்தி, கல்வித் தரத்தை உயா்த்தியுள்ளது என்றாா்.

இதில், வி.பி.எம்.எம். கல்வி நிறுவனத் தலைவா் சங்கா், முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆறுமுகம், வட்டாட்சியா் ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT