விருதுநகர்

காலவதியான உரிமத்துடன் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு சீல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சண்முக சுந்தராபுரம் பகுதியில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டியைச் சோ்ந்தவா் வடிவேல். இவா் சண்முக சுந்தராபுரம் பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வந்தாா். இவரது ஆலைக்கான உரிமம் காலாவதியான நிலையில், புதுப்பிக்காமல் ஆலையில் பட்டாசுகள் தயாரிப்புப் பணியை மேற்கொண்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சண்முகசுந்தராபுரம் பகுதியில் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையில் போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது போலீஸாரைக் கண்டதும், பட்டாசு ஆலையில் பணியாற்றிவா்கள் தப்பி ஓடினா். இதையடுத்து வருவாய்த் துறையினா் மூலம் பட்டாசு ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இதுகுறித்து ஆலை உரிமையாளா் வடிவேல் உள்ளிட்ட மூன்று போ் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT