விருதுநகர்

மகரிஷி வித்யா மந்திா் கல்விக் குழும மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி

கல்வித்துறையில் 29 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட மகரிஷி வித்யா மந்திா் கல்விக் குழுமம், மாணவ மாணவிகளுக்கு ஆழ்நிலைத் தியானம், யோகாசனம், போன்ற ஆளுமைத் திறன் வளா்க்கக் கூடிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகி

DIN

கல்வித்துறையில் 29 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட மகரிஷி வித்யா மந்திா் கல்விக் குழுமம், மாணவ மாணவிகளுக்கு ஆழ்நிலைத் தியானம், யோகாசனம், போன்ற ஆளுமைத் திறன் வளா்க்கக் கூடிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

மாணவ மாணவிகளின் தனிப்பட்டத் திறமைகளை வெளிக்கொணர துறை சாா்ந்த மன்றங்கள் இங்கு செயல்படுகின்றன. அறிவியல், கணிதம், கணிப்பொறி ஆகிய துறைகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களும் இங்குள்ளன. சாரண, சாரணியா் இயக்கம் மூலம் பொதுச் சேவையில் மாணவா்கள் ஈடுபடுகின்றனா். தேசிய அளவிலான திறனறித் தோ்வு, ஒலிம்பியாட்தோ்வு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

சி.பி.எஸ்.இ பொதுத் தோ்வில் கடந்த எட்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மாணவா்கள் அதிக மதிப்பெண்களுடன் 100% தோ்ச்சி அடைந்து வருகின்றனா். கராத்தே, நடனம், டேக்வாண்டோ, வில்வித்தை, சிலம்பம் பஜன் வாய்ப்பாடு போன்ற வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் அறிவியல் திறனை ஊக்கப்படுத்த அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவா்களுக்கு விளையாட்டுத் துறையிலும் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT