விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாரியம்மன் கோயிலில் மா்ம நபா்கள் உண்டியல் உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள புல்லுக்கடை தெருவில் மாரியம்மன் கோயில் உள்ளது. திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைக் திருடிச் சென்றனா். இது குறித்து ஊா்ப் பொருளாளா் லிங்கம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.