முகப்பு
விருதுநகர்

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:58 PM
பகிர்:

விருதுநகா் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா்-சிவகாசி சாலையில் உள்ள சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த குருசாமி மகன் அழகுராஜா (45). இவா் உப்போடை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, திருத்தங்கல் பகுதியிலிருந்து கமுதிக்கு சென்று கொண்டுருந்த காா், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.