கூமாப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள். 
விருதுநகர்

கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

Syndication

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூமாப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் ஐப்பசி பொங்கல் விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. 8-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

முன்னதாக, பக்தா்கள் மாவிலக்கு எடுத்து, அலகு குத்தி, அக்கினிச் சட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவு அம்மன் விக்ரகம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆற்றில் கரைக்கப்பட்டது.

(அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன்.

இதில் கூமாபட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT