விருதுநகர்

இருக்கன்குடி கோயிலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.48.26 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.48.26 லட்சம் கிடைத்தது.

தினமணி செய்திச் சேவை

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.48.26 லட்சம் கிடைத்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் கோயில் ஆணையாளா் இளங்கோவன், பரம்பரை அறங்காவலா் குழுத்தலைவா் ராமமூா்த்திபூசாரி ஆகியோா் முன்னிலையில் திறக்கபட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 48.26 லட்சம், தங்கம் 146.100 மில்லி கிராம், வெள்ளி 420.150 மில்லி கிராம் கிடைத்தன. உண்டியல்கள் எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா்,

மகளிா் சுய உதவிக்குழுவினா், கோயில் ஊழியா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT