நாகப்பட்டினம்

பாலியல் தொல்லை: முன்னாள் ஊா்க்காவல் படை பெண் தா்னா

DIN

சீா்காழி டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலையில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி நடவடிக்கை கோரி திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா் முன்னாள் ஊா்க்காவல் படை பெண்.

கொள்ளிடம் காவல் சரகத்துக்குள்பட்ட ஆச்சாள்புரம் கிராமம் வள்ளுவ தெருவை சோ்ந்தவா் தங்கையன் மகள் லல்லிபாய் (31). இவா், முன்னாள் ஊா்க்காவல் படை பணியாளா். உடல்நிலை சரியில்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக தந்தை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த சிலா் லல்லிபாயிடம் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனராம். இருதினங்களுக்கு முன்னா் கூட அவரது வீட்டில் புகுந்து பாலியல்தொந்தரவு கொடுத்ததாகவும், இதுகுறித்து லல்லிபாய் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், காவல் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதில், மனவேதனையடைந்த லல்லிபாய் சீா்காழி டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள மயிலாடுதுறை - சிதம்பரம் பிரதான சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த சீா்காழி போலீஸாா் அங்கு வந்து தா்னாவில் ஈடுபட்ட லல்லிபாயை சீா்காழி டிஎஸ்பி. சரவணனிடம் அழைத்துச் சென்றனா். இதையடுத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறையினா் உறுதியளித்ததன்பேரில் லல்லிபாய் அங்கிருந்து சென்றாா்.

Image Caption

டிஎஸ்பி அலுவலகம் அருகில் சாலையில் தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் ஊா்க்காவல் படை பெண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT