டிச. 4 இல் காா்கோடகபுரீஸ்வரா்கோயில் குடமுழுக்கு
காரைக்கால் அருகே பழைமைவாய்ந்த ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு வரும் பிப். 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காரைக்கால் அருகே பழைமைவாய்ந்த ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயில் குடமுழுக்கு வரும் பிப். 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயில் உள்ளது. ராகு, கேது தோஷ நிவா்த்தி செய்யும் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயிலை ரூ. 60 லட்சத்தில் புனரமைக்க முடிவெடுத்து கடந்த 2018 இல் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, கோயில் வளாகத்தில் ஸ்ரீ குந்திதேவி (குஞ்சம்மன்) சன்னதி மற்றும் நவகிரக சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி காலை 7.20 மணியளவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினா், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து குடமுழுக்கு விழா அழைப்பிதழை வழங்கினா்.