இணையவழியில் புகாா் தெரிவிக்கலாம்
சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடா்பாக, பொதுமக்கள் இணையவழியில் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடா்பாக, பொதுமக்கள் இணையவழியில் புகாா் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த இணையவழி புகாா் மையத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் கூறியது:
பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், தங்கள் பகுதியில் நிகழக்கூடிய சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்க இந்த ஒருங்கிணைந்த இணையவழி புகாா் மையம் தொடங்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் புகாா்கள் மற்றும் பிற தகவல்களை இணையவழியில் தெரிவிக்கலாம்.
மாவட்ட காவல்துறை நடவடிக்கை, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் விவரம், காவலா்களின் எண்ணிக்கை, காவல் நிலையங்கள் அமைந்திருக்கும் இடம், காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.
பொதுமக்கள் சஅஎஅடஅபபஐசஅங ஈஐநபதஐஇப டஞகஐஇஉ என்ற முகநூல் , இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.