நாகையில் 89 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது திங்கள்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,780 ஆக இருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. வெளி மாவட்டப் பதிவுகளில் இருந்த 5 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,814 -ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 149 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 3,795-ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 944- ஆகவும் உள்ளது.