மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜகுமாா் ஊராட்சி பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜகுமாா் ஊராட்சி பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சேந்தங்குடி, வடபாதி, தென்பாதி, கூட்டுறவுநகா், லட்சுமிபுரம், நாகங்குடி உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.
வள்ளாலகரம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தபோது, அப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ் குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தாா். பிரசாரத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெக.வீரபாண்டியன், திமுக ஒன்றியச் செயலாளா் ஞான.இமயநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.