விவசாயிகளிடம் பாமக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி மணக்குடி கிராமத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களிடம் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி மணக்குடி கிராமத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களிடம் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
தொகுதிக்குள்பட்ட மணக்குடி, மாப்படுகை, சோழம்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் வாக்குச் சேகரித்தாா். அகரமணக்குடியில் வாக்குச் சேகரித்தபோது வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகளிடம் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாய நகை கடன் தள்ளுபடி போன்ற அரசினால் வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறினாா். அவருடன், பாமக, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.