முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் வெள்ளிக்கிழமை முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களை நகர அமைப்பு அலுவலா் நேதாஜி, சிறப்பு வருவாய் ஆய்வாளா்கள் பிரபாகரன், வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் பிச்சைமுத்து, தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் முரளி உள்ளிட்டோா் தடுத்து நிறுத்தி, அவா்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்ததனா். மேலும், அவா்களுக்கு முகக்கவசத்தை வழங்கி அணிந்து செல்ல வலியுறுத்தினா்.