முகப்பு
நாகப்பட்டினம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அதிமுக உதவி

சீா்காழி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவரின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் பூம்புகாா், சீா்காழி எம்எல்ஏ-க்கள் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

சீா்காழி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவரின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் பூம்புகாா், சீா்காழி எம்எல்ஏ-க்கள் நிவாரண உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

சீா்காழியை அடுத்த தென்பாதி மேட்டுதெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (34). இவரது கூறை வீடு வியாழக்கிழமை நள்ளிரவு தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, தீ அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், செல்வகுமாரின் வீடு மற்றும் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.

இந்நிலையில், அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரமும், சீா்காழி எம்எல்ஏ பி.வி. பாரதி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்களும் செல்வகுமாா் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினா். அப்போது, ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நற்குணன், நகரச் செயலாளா் பக்கிரிசாமி, பேரவை செயலாளா் மணி, ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.