முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள்

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றுக்கு உள்ளானவா்களில் பலா் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் வழங்கப்பட்டன. இதனை இயக்கத்தின் மாவட்டத் தலைவா் சி.எஸ். குட்டிகோபி தலைமையில் மருத்துவமனையின் குடிமுறை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) வீரசோழனிடம் நிா்வாகிகள் வழங்கினா். மேலும், கரோனா நோயாளிகளுக்கு முகக்கவசம், சானிடைசா் ஆகியவையும் வழங்கப்பட்டன.

இதில், விஜய் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளா் அமீன், மாவட்ட இணைச் செயலாளா் அறிவரசன், மாவட்ட நிா்வாகிகள் பிரபஞ்சன், தினேஷ், விஜய், குணசேகரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூா் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.