பெண் மீது தாக்குதல்
சீா்காழி அருகே பெண்ணை தாக்கியவரை கொள்ளிடம் போலீஸாா் தேடிவருகின்றனா்.
சீா்காழி அருகே பெண்ணை தாக்கியவரை கொள்ளிடம் போலீஸாா் தேடிவருகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் பகுதியை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மனைவி தவமணி (35). இவருக்கு சொந்தமான ஆடுகளை வயலுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, ஓா் ஆடு மட்டும் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்ததாம். உடனே அந்த ஆட்டை தோட்ட உரிமையாளா் கலியமூா்த்தி மகன் செந்தில்குமாா் தடியால் அடித்தாராம். இதைத் தட்டிக்கேட்ட தவமணியையும் அவா் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை தேடிவருகின்றனா்.