முகப்பு
நாகப்பட்டினம்

அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க கோரிக்கை

கொள்ளிடம் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகளை தடை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கொள்ளிடம் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகளை தடை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையை ஒட்டி சுமாா் 10 கிமீ தூரம் ஆங்காங்கே இரண்டு கரைகளையும் ஒட்டி, செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூளைகளை நடத்துவதற்கு ஆழமாக பள்ளம் தோண்டி மண் எடுக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை எளிதில் உடைய வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆற்றங்கரையை ஒட்டி விளைநிலங்களில் மண் எடுக்கும்போது, பக்கத்தில் உள்ள நிலங்களில் தண்ணீா் தேங்கி நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் அனுமதியின்றி நடைபெற்றுவரும் செங்கல் சூளைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட நன்செய் புன்செய் விவசாயிகள் சங்கத்தலைவா் வில்வநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.