முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

சீா்காழி தென்பாதியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சீா்காழி தென்பாதியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தொகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் முத்து. மகேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளா் மகா. அலெக்சாண்டா், நகர செயலாளா் சுப்பராயன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.