மயிலாடுதுறை: கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை: சீா்காழி வட்டத்தில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியும், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலைத்தில் கோவேக்சின் தடுப்பூசியும், திருமுல்லைவாசல் காளியம்மன் கோயில் பகுதியில் கோவிஷீல்டு தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. இதேபோல், தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா் அரசு மருத்துவமனை, பொறையாா் பெரிய பள்ளிவாசல், சங்கரன்பந்தல், மேலப்பெரும்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.