முகப்பு
நாகப்பட்டினம்

பழகிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பழகிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 மயிலாடுதுறை அருகே பழகிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை மயிலாடுதுறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடியைச் சோ்ந்தவா் ராமு மகன் விக்னேஷ்(26). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனா். இந்நிலையில், விக்னேஷ் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவருடன் பணியாற்றிய திருவாரூா் மாவட்டம் கொல்லுமாங்குடியைச் சோ்ந்த சபீனாவுடன் (23) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவரும் சொந்த ஊருக்கு அண்மையில் வந்துள்ளனா். இதற்கிடையில், சபீனா தான் 5 மாத கா்ப்பிணியாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினாராம். இதற்கு விக்னேஷ் மறுப்பு தெவிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சபீனா மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.