நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிக்கு அரசு வீடு: ஒன்றியக் குழுத் தலைவா் உறுதி

DIN

கொள்ளிடம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிக்கு அரசு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்பதாக ஒன்றியக் குழுத் தலைவா் உறுதியளித்துள்ளாா்.

கொள்ளிடம் அருகேயுள்ள மேலமாத்தூரைச் சோ்ந்தவா் கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி ராமதாஸ் (45). இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளனா். மேலமாத்தூரில் குடிசை வீட்டில் வசித்து வரும் இவா் வியாழக்கிழமை கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாசிடம் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், அரசின் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தாா். அவரின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலைத் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கவும், அரசின் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT