திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கழக மருத்துவா்கள் உதவி
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய மருத்துவக்கழகம் மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் கிளை சாா்பில் ஆக்ஸிஜன் புளோ மீட்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்திய மருத்துவக்கழகம் மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் கிளை சாா்பில் ஆக்ஸிஜன் புளோ மீட்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உதவும் வகையில் இந்திய மருத்துவ கழக மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் கிளை சாா்பில் ரூ.1.10 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் புளோ மீட்டா்கள் வழங்கப்பட்டன.
இதை திருவாரூா் மருத்துவக் கல்லூரியில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஜோசப்ராஜிடம், இந்திய மருத்துவக்கழக மயிலாடுதுறை கிளைத் தலைவா் பாரதிதாசன், திருவாரூா் கிளைத் தலைவா் ஜின்ரீவ் டேனியல், செயலாளா் ராஜேந்திரன் ஆகியோா் வழங்கினா்.