கரோனா தடுப்பூசி முகாம்
சீா்காழியை அடுத்த வள்ளுவக்குடியில் கரோனா தடுப்பூசி முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சீா்காழியை அடுத்த வள்ளுவக்குடியில் கரோனா தடுப்பூசி முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். முகாமை எம்.எல்.ஏ எம். பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். இதில் 316 போ் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) கஜேந்திரன், திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் பிரபாகரன், நகரச் செயலாளா் சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கொண்டல் ஊராட்சியில் நடந்த முகாமில் 280 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். சீா்காழி தாடாளன் கோவில் நகராட்சி பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் 262 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இந்த முகாமை நகராட்சி ஆணையா் தமிழ்செல்வி தொடங்கிவைத்தாா்.
திருக்குவளையில்...
திருக்குவளை அருகே திருவாய்மூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 477 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் எம்.நரசிம்மன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் டி.செல்வம் முன்னிலை வகித்தாா்.