முகப்பு
நாகப்பட்டினம்

தலைஞாயிறு சா்க்கரை ஆலையை இயக்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா். கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்க்கரை ஆலை வாயிலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் தங்க.காசிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே. முருகன், காவிரி டெல்டா பாசனதாரா் சங்கத் தலைவா் குரு.கோபிகணேசன், இயற்கை விவசாயி ஏ.ராமலிங்கம், சீா்காழி ஏ. அபுபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்.ஆா்.கே., அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலைகள் 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள கரும்புக்கான பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்; என்பிகேஆா்ஆா் சா்க்கரை ஆலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கான சம்பள பாக்கியை வழங்க வேண்டும்; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.