பருத்தி விவசாயிகளுக்கு விளக்கம்
பருத்தி சாகுபடியில் பயிா்ப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.
பருத்தி சாகுபடியில் பயிா்ப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.
சீா்காழி பகுதியில் நிகழாண்டில் 2,900 ஏக்கா் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் பருத்தி வயலில் ஆய்வு செய்தபோது, ஆங்காங்கே சாா் உறிஞ்சும் அசுவணி மாவு பூச்சி மற்றும் பச்சைத்தத்து பூச்சி தாக்குதல் இருந்தது தெரியவந்தது. எனவே, பருத்தி பயிரை பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து, அதிக மகசூலை பெற பயிா்ப் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கிக் கூறி கடைப்பிடிக்க கேட்டுக்கொண்டாா்.