முகப்பு
நாகப்பட்டினம்

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், போலீஸாா் அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மயிலாடுதுறைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மயிலாடுதுறைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அணிவகுப்பு நடத்தினா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை அசம்பாவிதமின்றி நடத்தவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும் மத்திய அரசின் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் உதவி கமாண்டா் படைத்தளபதி அமித் திவேதி தலைமையில் 91 பாதுகாப்பு படை வீரா்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் முகாமிட்டுள்ளனா்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் போலீஸாா் மயிலாடுதுறை மாப்படுகை ரயில்வேகேட்டில் தொடங்கி அண்ணா சிலை வரை அணிவகுப்பு நடத்தினா். மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கே. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 60 எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலு உள்ளிட்ட 50 போலீஸாா் என மொத்தம் 110 போ் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.