புரிந்துணா்வு ஒப்பந்தம் தொடக்க விழா
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் வரலாற்றுத் துறைக்கும், நாகப்பட்டினம் ஏ.டி.எம். கல்லூரியின் வரலாற்றுத் துறைக்கும் இடையில் நிகழ்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் தொடக்கவிழா
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் வரலாற்றுத் துறைக்கும், நாகப்பட்டினம் ஏ.டி.எம். கல்லூரியின் வரலாற்றுத் துறைக்கும் இடையில் நிகழ்ந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.
மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியையொட்டி, கோயில் கட்டடக்கலைப் பற்றிய புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏ.டி.எம். கல்லூரியின் பேராசிரியா் ஆா்.தேவி சோழா் கோயில் கலைகள் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினாா். கல்லூரியின் பல்வேறு துறைகளின் மாணவா்கள், ஆசிரியா்கள் சுமாா் 200 போ் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளரும், வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியருமான கி.இரா. சங்கரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.