முகப்பு
நாகப்பட்டினம்

அனுமதியின்றி பிரசாரம்: வாகனம் பறிமுதல்

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் அனுமதி இன்றி பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் சனிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதியில் அனுமதி இன்றி பிரசாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் சனிக்கிழமை பறிமுதல் செய்தாா்.

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ஊராட்சியில் பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளா் குணசேகரன், காவலா் மணிகண்டன் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மயிலாடுதுறை பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமியை ஆதரித்து அவ்வழியே ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து சென்ற வாகனத்தை சோதனை செய்ததில், அதில், தோ்தல் நடத்தும் அலுவரால் வழங்கப்படும் வாகன அனுமதி ஆணை இல்லாதது தெரியவந்தது. வாகன ஓட்டுநா் முத்துராமனிடம் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி பிரசாரம் மேற்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தையும், ஒலிபெருக்கி மற்றம் ஆம்ப்ளிபையா் ஆகியவற்றை பறக்கும் படை அலுவலா் து.விஜயராகவன் கைப்பற்றி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.