முகப்பு
நாகப்பட்டினம்

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக எம்.பி.

மயிலாடுதுறை சட்டப் பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாரை ஆதரித்து, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மயிலாடுதுறை சட்டப் பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாரை ஆதரித்து, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாா் மயிலாடுதுறை நகருக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் திறந்த வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் மயிலாடுதுறை மக்களைத் தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம் வேட்பாளா் எஸ்.ராஜகுமாருக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, திமுக நகரச் செயலாளா் குண்டாமணி செல்வராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சத்தியசீலன் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆதரவாக வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.