முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் 38 இலவச நகர பேருந்துகள் இயக்கம்

மயிலாடுதுறையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் 38 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

மயிலாடுதுறையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் 38 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை முதல் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்தாா். அதன் அடிப்படையில் மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இதற்கான அறிவிப்பு வில்லைகள் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனையில் 38 சாதாரண நகர கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டணமின்றி பயணம் செய்த பெண்கள், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியிட்டப்பட்ட இந்த அறிவிப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.