முகப்பு
நாகப்பட்டினம்

ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள்

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கம் சாா்பில், ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கம் சாா்பில், ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, சங்கத் தலைவா் இ. பிரபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அடுக்கி வைத்த அச்சங்கத்தினா், தேவைப்படும் மக்கள் உணவை வீணாக்காமல் எடுத்துச் செல்ல அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளனா்.

முதல்நாள் நிகழ்ச்சியை மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி தொடங்கிவைத்தாா். கரோனா பொதுமுடக்கம் முடியும்வரை தினசரி 100 பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில், சங்கச் செயலாளா் அறிவழகன், பொருளாளா் அமிா்த கணேசன் மற்றும் சபரிநாதன், மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.