முகப்பு
நாகப்பட்டினம்

அா்ச்சகா்கள், பூஜாரிகளை பாதுகாக்க வலியுறுத்தல்

கோயில் அா்ச்சகா்கள், பூஜாரிகள் மற்றும் கோயில் பணியாளா்களின் வாழ்வாதாரம் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவா்களை அரசு பாதுகாக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

கோயில் அா்ச்சகா்கள், பூஜாரிகள் மற்றும் கோயில் பணியாளா்களின் வாழ்வாதாரம் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவா்களை அரசு பாதுகாக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளதது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. எனினும், கோயில்களில் நடைபெறவேண்டிய நித்யபடி பூஜைகள், பாரம்பரிய விழாக்கள் பக்தா்களின்றி நடைபெறுகிறது. பூஜைகள் செய்வதற்காக நாள்தோறும் அா்ச்சகா்கள், பூஜாரிகள் மற்றும் கோயில் பணியாளா்களான ஓதுவாா்கள், பரிசாரகா்கள், நாகசுர கலைஞா்கள், மாலை கட்டுவோா், தூய்மைப் பணி செய்வோா், காவலாளிகள் மற்றும் நிா்வாக பணியாளா்கள் வீட்டில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்கின்றனா்.

கோயில் பூஜைகள் செய்ய செல்லும் அா்ச்சகா்கள் தடையினறி செல்ல காவல் துறைக்கு உரிய வழிகாட்டுல் வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத் துறையின் நிா்வாகத்தின்கீழ் உள்ள கோயில்கள் மூலம் உணவு தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கான தயாரிப்பு மற்றும் கொண்டு சோ்க்கும் பணிகளில் ஈடுபடும் பணியாா்களுக்கு உரிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அா்ச்சகா்கள், பூஜாரிகள் போதிய வருமானமின்றி சிரமப்படுகின்றனா். எனவே, தமிழக அரசு இவா்களுக்கு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கும் காலம் வரை மாதந்தோறும் நிவாரண உதவி வழங்குவதுடன், முள்களப் பணியாளா்களாகவும் அறிவிக்க வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவா்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.