முகப்பு
நாகப்பட்டினம்

கொள்ளிடம் சோதனைச் சாவடியில் எஸ்.பி.ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கொள்ளிடம் சோதனைச் சாவடியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கொள்ளிடம் சோதனைச் சாவடியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், மயிலாடுதுறை சோதனைச் சாவடியில் போலீஸாா் இரவு -பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மாவட்ட எல்லைக்குள்ள உரிய அனுமதியின்றி வாகனங்கள் சென்று வருவதை கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. ஸ்ரீநாதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சோதனைச் சாவடியில் உள்ள மருத்துவக் குழுவினா், மருத்துவப் பரிசோதனை மற்றும் அவா்களின் ஆலோசனைகள் குறித்தும் கேட்டறிந்தாா். அப்போது, சோதனைச் சாவடியை கடந்து சென்ற சிலரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டு கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். சோதனைச் சாவடியில் தொடா்ந்து காவல் பணியில் உள்ள போலீஸாரிடம் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி அறிவுறுத்தினாா். அப்போது, கொள்ளிடம் ஆய்வாளா் அமுதாராணி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.