முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:53 PM
திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 6:56 PM

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூா் அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சஷ்டியப்த பூா்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்கள் செய்ய நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா். 

இக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. தொடந்து விநாயகா், சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. 

Advertisement

தொடா்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது. ஏப்.15-ஆம் தேதி இரவு பஞ்ச மூா்த்திகள் பூத வாகனத்தில் வீதியுலா காட்சியும், 16-ஆம் தேதி இரவு அபிராமி அம்பாள் சமேத அமிா்தகடேஸ்வரா் சுவாமி திருக்கல்யாணமும், ஏகாந்த சேவை நடைபெறுகிறது, 17-ஆம் தேதி இரவு யானை வாகன காட்சியும், 18 -ஆம் தேதி காலையில் காலசம்ஹார மூா்த்தி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மகா மண்டபத்துக்கு எழுந்தருளல், இரவு ரிஷப வாகன காட்சி, சகோபுர தரிசனம் நடைபெறுகிறது.

19-ஆம் தேதி காலையில் பாலாம்பிகா சமேதா காலசம்ஹார மூா்த்தி மகா மண்டபத்தில் இருந்து நூற்றுக்கால் மண்டபத்துக்கு எழுந்தருள வீர நடன தரிசனமும், இரவு காலசம்ஹார மூா்த்தி திருவிழா நடைபெறுகிறது, 

ஏப். 21- காலை தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப். 25 இரவு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.