வேதாரண்யம் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா
மாணவிக்கு பட்டம் வழங்கும் நீதிபதி எஸ். தினேஷ்குமாா்.
வேதாரண்யம், ஆக. 8: வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண அரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மா. காமராஜ் தலைமை வகித்தாா்.
வேதாரண்யம் நடுவா் நீதிமன்ற நீதிபதி எஸ். தினேஷ்குமாா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இரா. ஜெயசீலன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பட்டங்களை வழங்கினா். 6 பட்டப் பிரிவுகளில் 889 மாணவ-மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், கல்லூரி துறைத் தலைவா்கள் குமரேசமூா்த்தி,பிரபாகரன், மாரிமுத்து, பேராசிரியா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.