வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் தெற்கு தனியாா் எடை பாலம் அருகே சிலா் அனுமதியின்றி மணல் அள்ளியுள்ளனா். அப்போது, அந்தவழியாக ரோந்து சென்ற தனிப்படை போலீஸாா், மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி ஓட்டுநா் மேலப்பெருமழை அ. அயிலன் (25),டிராக்டா் ஓட்டுநா் கலப்பால் ஞா.சுரேஷ் (30) ஆகிய இருவரை கைது செய்தனா். ஜேசிபி இயந்திரம், டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.