திருக்குவளை வட்டம், வல்லத்தில், தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வல்லம் கிராமத்தில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ் முயற்சியால் 2020- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், நிகழாண்டு சம்பா அறுவடையை முன்னிட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினருமான டி. செல்வம், சிபிஐ கீழையூா் ஒன்றிய துணைச் செயலாளா் ஜி. சங்கா், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பருவநிலை எழுத்தா், பருவநிலை உதவியாளா், பாதுகாவலா், சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.