முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:58 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 5:37 PM

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி நுழைவுவாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் மதியரசன், மனோகரன் ரஜினிகாந்த் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆண்டுக்கு 11 மாதத்திற்கு பதிலாக 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும் , மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இறுதியில் கௌரவ விரிவுரையாளா் செல்வகுமாரி நன்றி கூறினாா்.