காரைக்கால்

புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

DIN

ஏசு தமது 12 சீடர்களின் பாதம் கழுவியதை நினைவூட்டும் வகையில் புனித தேற்றரவு அன்னை தேவாலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள 46 நாள் தவ காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் புனித வெள்ளியையொட்டி வியாழக்கிழமை காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சார்பில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை தேவாலயம் சார்பில், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 பங்கு மக்களின் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் திரண்டிருந்த மக்களின் மத்தியில், 12 சீடர்களின் பாதம் கழுவி அருள்தந்தை முத்தமிட்டார். கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலயத்திலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT