காரைக்கால்

கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாண உத்ஸவம்

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் - சுந்தராம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக நலன், மழை வளம் வேண்டி  ஆண்டுதோறும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஹோமத்தின் நிறைவில் மாலையில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், ஸ்ரீ கைலாசநாதர் - சுந்தராம்பாளுக்கு திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டு திருக்கல்யாணத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது.
வரிசை கொண்டு வருதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருக்கல்யாண சடங்குகள் முடிக்கப்பட்டு, ஸ்ரீ கைலாசநாதர் சார்பாக சிவாச்சாரியார் ஸ்ரீ சுந்தராம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்தார். பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் அடங்கிய தம்பூலப் பை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அர்த்தஜாம பள்ளியறை வழிபாடு செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் அர்த்த ஜாம வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் ருத்ர ஹோம உபயதாரர்கள் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT