காரைக்கால்

மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.   
விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் துணைத் தலைவர் என்.வி.சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசினார்.   அறக்கட்டளை நிர்வாகி அருணாதேவி, மருத்துவக் கண்காணிப்பாளர் செய்யது மரூஃப், துணை முதல்வர் சாந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கல்லூரி முதல்வர் அனபெல் ராஜசேகரன் வரவேற்றார்.
விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி  மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் பேசியது : அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் சாதாரண மனிதர்களுக்கும் தரமான மருத்துவ சேவை என்பது அவசியமாகும்.  ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு நான் சென்றபோது, என்னுடைய பிரிவில் 30 மருத்துவர்களும் வந்திருந்தனர். இவர்களிடம் வினவியபோது, நிர்வாக ஆளுமையின் மூலம் மருத்துவ சேவையில் மாற்றங்களை கொண்டுவரும் எண்ணம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். இதிலிருந்து மருத்துவ நிர்வாகத்தில் எவ்வளவு சீரமைப்புத் தேவையிருக்கிறது என்பதை அறியமுடியும்.
நமது நாட்டில் மருத்துவக் கொள்கை சிறந்த முறையில் அமைந்துள்ளது. இதனை மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் பயன்படுத்திக்கொண்டு, அதன் இலக்கை நிறைவேற்ற பாடுபடவேண்டும். பேரிடர் காலங்களில் மருத்துவர்களது தன்னலமற்ற சேவை மிகவும் அவசியமாகும். தற்போது நவீன மருத்துவ உலகில், தற்கால இளம் மருத்துவர்கள் நிறைய சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT