முகப்பு
காரைக்கால்

காரைக்கால் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஆன்-லைன் சேவை தொடக்கம்

காரைக்கால் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்ய ஆன்-லைன் முறையை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:31 am IST
பகிர்:

காரைக்கால் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் வாகனம் பதிவு செய்ய ஆன்-லைன் முறையை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
 இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து மண்டல போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார்.
இந்த திட்டம் குறித்து ஆட்சியர் ஆர்.கேசவன் செய்தியாளர்களிடம் கூறியது : பல்வேறு அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் ஆன்-லைனில் கொண்டுவரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் தற்போது பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது காரைக்கால் மாவட்டத்தில் 10 வாகன டீலர்கள் இவ்வாறான சேவையை பயன்படுத்த முடியும். இவர்களுக்கான பதிவு எண் தரப்பட்டுள்ளது. வாகனங்கள் வாங்க வருவோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு, ஆன்-லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவுடன் வாகனப் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் வந்துவிடும்.
இதுகுறித்து வாகனம் வாங்குவோர், டீலர்களிடம் பேசி இவ்வாறான சேவையை பெற ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். எண் கிடைப்பது உள்ளிட்ட பிற ஆவணங்கள் தாமதத்துக்கு இனி வாய்ப்பில்லை. சாதாரணமாக 3 நாள்களில் ஆகவேண்டிய பணிகள் ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டுவிடும். பொதுமக்கள் நேரடியாக சில ஆவணங்கள் பெறுவதற்கான பதிவை ஆன்-லைனில் செய்வதற்கான திட்டம் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.