காரைக்கால்

காரைக்காலில் நீட் தேர்வு இலவச பயிற்சிக்கு பதிவு செய்ய அறிவுறுத்தல்

DIN

நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்கள் பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வரும், நீட் தேர்வு இலவச பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான கோவிந்தராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் ஏப்.4-ஆம் தேதி முதல் மே 3-ஆம் தேதி வரை தொடர் வகுப்பு நடைபெறவுள்ளது.
நடப்பு ஆண்டில் உயிரியல் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள அரசுப் பள்ளி  மாணவ, மாணவியர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உடனடியாக தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளரை அணுகி, தங்களது நீட் 2018 விண்ணப்ப விவரம், மேல்நிலைப் பள்ளி தேர்வு 2018-இன் தேர்வுக்கூட அனுமதி சீட்டை காண்பித்து பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். பதிவு செய்யவேண்டிய கடைசி நாள் ஏப்.2 என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT