முகப்பு
காரைக்கால்

புதுவை மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருக்கு வாழ்த்து

: புதுவை மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவராக காரைக்காலைச் சேர்ந்த இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 15 மே, 2018 at 1:03 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

: புதுவை மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவராக காரைக்காலைச் சேர்ந்த இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய அளவில் ஜமாஅத்துல் உலமா சபை செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதுமுள்ள இமாம்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம் அகில இந்திய அமைப்பால் செய்யப்படுகிறது.
புதுவை மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய தலைவராக காரைக்கால் தெருவுப் பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் மெளலானா ஹாபீஸ் எம்.பி. முஹம்மது அலி ரஹ்மானி ஹஜ்ரத் என்பவர் ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் மாநில வக்ஃபு வாரிய உறுப்பினர் எம்.ஓ.எச்.யு. பஷீர் உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
மாநில முன்னாள் வக்ஃபு வாரிய உறுப்பினரும், முஹ்யித்தீன் ஜாமிஆமஸ்ஜித் இமாம் முகமது யூசுப் ஆலிம், வாஞ்சூர் ஹாஜி அலிஷா தர்கா முத்தவல்லி ஜெ.ஜெ., வக்ஃபு காஜி எம்.எம்.இ. ஜப்பார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.